UEFA சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: PSGயிடம் பாயெர்ன் முனிச் அதிர்ச்சி தோல்வி
UEFA சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் PSG அணி 5-4 என்ற கோல் கணக்கில் பாயெர்ன் முனிச் அணியை வீழ்த்தியது.
பெனால்டி வாய்ப்பில் ஹாரி கேன் கோல்
பாரிஸில் நடந்த UEFA சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில், பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (PSG) மற்றும் பாயெர்ன் முனிச் (Bayern Munich) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பாயெர்ன் வீரர் ஹாரி கேன் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். PSG வீரர் Khvicha 24வது நிமிடத்தில் பதிலடி கோல் அடித்தார். பின்னர் சக வீரர் ஜோவோ நேவ்ஸ் 33வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
41வது நிமிடத்தில் மைக்கேல் ஆலிஸ் (பாயெர்ன்) கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதற்கு பதிலடியாக PSG வீரர் ஒஸ்மானே டெம்பெலே (45+5) கோல் அடித்தார்.

PSG வெற்றி
PSG வீரர்கள் Khvicha 56வது நிமிடத்திலும், ஓஸ்மானே 58வது நிமிடத்திலும் கோல்கள் அடிக்க அணியின் கோல் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

பாயெர்ன் வீரர்களும் சளைக்காமல் போராடி 65வது (டயோட்), 68வது (லூயிஸ் டயஸ்) நிமிடங்களில் கோல்கள் அடித்தனர்.
எனினும், PSG வீரர்களின் அபாரமான தடுப்பாட்டத்தினால் பாயெர்ன் அணியால் 5வது கோலினை எட்ட முடியவில்லை. இதனால் PSG அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |