மெஸ்சி, எம்பாப்பேயின் துல்லியமான கோல்களால் பிஎஸ்ஜி மிரட்டல் வெற்றி
Parc des Princes மைதானத்தில் பாரிஸ் செயின்ட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தியது.
அடுத்தடுத்து விழுந்த கோல்கள்
Ligue 1 தொடரின் நேற்றைய போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் லென்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில், நட்சத்திர வீரர் எம்பாப்பே 31வது நிமிடத்தில் துல்லியமாக ஒரு கோல் அடித்தார்.
⌚️ 31' Ouverture du score de @KMbappe ! un but très spécial ✨#PSGRCL I 1-0 pic.twitter.com/MiI5rpVzvn
— Paris Saint-Germain (@PSG_inside) April 15, 2023
அதன் பின்னர் அடுத்த 6 நிமிடங்களில் விட்டிங்ஹா கோல் அடிக்க, 40வது நிமிடத்தில் லயோனல் மெஸ்சி விரைவாக ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
PSG அபார வெற்றி
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், லென்ஸ் அணி வீரர் Przemyslaw Frankowski கோல் அடித்தார்.
ஆனால் மேலும் லென்ஸ் அணியால் கோல் அடிக்க முடியாததால் PSG அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
?⌛️⚽️
— Paris Saint-Germain (@PSG_inside) April 15, 2023
Victoire parisienne à domicile dans ce choc en tête du classement de #Ligue1 ?❤️?#PSGRCL I 3-1 pic.twitter.com/RPBqfqVsUz
இந்தப் போட்டியில் லென்ஸ் அணி வீரர் சலிஸ் அப்துல் சமெட் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது PSG அணிக்கு 23வது வெற்றி ஆகும். 72 புள்ளிகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.