LOSC அணியை அதிரடியாக வீழ்த்திய பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்
லிகு1 தொடரில் LOSC அணியை 3-1 என்ற கோல் கணக்கில் PSG அணி வீழ்த்தியது.
Parc des Princes மைதானத்தில் நடந்த லிகு1 போட்டியில் PSG மற்றும் LOSC அணிகள் மோதின.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் LOSC அணி வீரர் யூசுப் யாசிஸி PSGயின் பாதுகாப்பு அரணை உடைத்து கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 10வது நிமிடத்திலேயே PSG வீரர் ராமோஸ் அபாரமாக கோல் அடித்தார். அதன் பின்னர் 17வது நிமிடத்தில் PSG அணி வீரர் அடித்த ஷாட்டை, LOSCயின் அலெக்ஸ்சான்ட்ரோ தடுக்க முயற்சிக்க அது கோல் வலைக்குள் சென்று Own Goal ஆக மாறியது.
@PSG_inside
இதன்மூலம் PSG முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாம் பாதியில் LOSC அணி கடுமையான நெருக்கடியை PSGக்கு கொடுத்தது.
இரு அணி வீரர்களும் கடுமையாக கோல் அடிக்க போராடிய நிலையில், 80வது நிமிடத்தில் PSG வீரர் ராண்டல் கோலோ கோல் அடித்தார். இதுவே அந்த அணியின் வெற்றி கோலாக மாற, PSG அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் PSG அணி 50 புள்ளிகளுடன், 15 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதே சமயம் LOSC அணி 9 வெற்றிகளுடன் 4வது இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |