கோல் மழை பொழிந்த PSG! 6-0 என இமாலய வெற்றி
Montpellier அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி 6-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
பிராட்லி இரட்டை கோல்
லிகு 1 தொடர் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (PSG) மற்றும் மோண்ட்பெல்லியர் (Montpellier) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே PSG வீரர் பிராட்லி பார்க்கோலா (Bradley Barcola) அபாரமாக கோல் அடித்தார்.
??????? ??????? ?❤️?#PSGMHSC 1-0 I #Ligue1 https://t.co/MNEx6h9MTd pic.twitter.com/uFhpYu0rio
— Paris Saint-Germain (@PSG_inside) August 23, 2024
அதனைத் தொடர்ந்து மார்கோ அசென்சியோ (Marco Asensio) 24வது நிமிடத்திலும், பிராட்லி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஹக்கிமி கோல்
PSGயின் நட்சத்திர வீரர் அச்ராஃப் ஹக்கிமி (Achraf Hakimi) மிரட்டலாக 58வது நிமிடத்தில் கோல் அடிக்க, அடுத்த 2 நிமிடங்களில் சக வீரர் வாரென் ஸைரே எமெரே (60வது நிமிடம்) கோல் அடித்தார்.
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் Montpellier அணியினர் திணறினர்.
லீ காங்-இன் 82வது நிமிடத்தில் தமது அணிக்காக 6வது கோல் அடிக்க, PSG அணி 6-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
⏱️ 15' - Les Parisiens en maîtrise dans ce premier quart d'heure. ?#PSGMHSC 1-0 I #Ligue1 pic.twitter.com/FKHzx1sK2w
— Paris Saint-Germain (@PSG_inside) August 23, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |