மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர் மூவரும் வேண்டாம்! புதிதாக 5 வீரர்களை தேர்வு செய்துள்ள PSG
லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஆகிய மூவரையும் உடைக்கும் நோக்கத்தில் PSG அணி 5 வீரர்களை தேர்வு செய்தது.
மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர் மூவரையும் உடைக்கும் PSG
Ligue 1 கால்பந்து லீகின் நம்பர்-1 அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி, லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), நெய்மர் (Neymar) மற்றும் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) ஆகிய மூவரின் ஸ்ட்ரைக்கிங்கை வரவிருக்கும் கோடையில் உடைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
PSG அணி, எம்பாப்பேவை தங்கள் திட்டத்தின் முக்கிய மையமாக வைத்திருப்பதில் உறுதியாக உள்ளது, ஆனால் நெய்மர் மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு இடையில் ஒருவரை அணி தியாகம் செய்யவுள்ளது.
Getty Images
RMC Sport அறிக்கையின்படி, கோடைகால ட்ரான்ஸ்ஃபர் சாளரத்திற்கான ஐந்து நபர்களின் தேர்வுப் பட்டியலை PSG அணி உருவாக்கியுள்ளது.
5 பேர் கொண்ட பட்டியல்
கோடைகாலத்திற்கான கிளப்பின் ஐந்து பேர் கொண்ட பட்டியலில் AS மொனாக்கோ மிட்ஃபீல்டர் யூசுஃப் ஃபோபானா (Youssouf Fofana) மற்றும் OGC நைஸ் நட்சத்திரம் கெஃப்ரென் துரம் (Khephren Thuram) ஆகியோர் அடங்குவர்.
Getty
மேலும், Bundesliga லீகில் Eintracht Frankfurt அணியிற்குச் சேர்ந்த ராண்டால் கோலோ முவானி (Randal Kolo Muani), Borussia Monchengladbach அணியைச் சேர்ந்த மார்கஸ் துரம் (Marcus Thuram) மற்றும் Borussia Monchengladbach அணியைச் சேர்ந்த மனு கோன் (Manu Kone) ஆகியோரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.
PSG அணி தங்கள் வீரர்களுக்கான ஊதியக் கட்டணத்தைக் குறைக்கப் பார்க்கிறார்கள், அதனால்தான் அவர்கள் மாற்றியமைப்பதைக் கருத்தில் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
PSG