அசுர வேகத்தில் கோல் அடித்து கர்ஜித்த எம்பாப்பே! காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்த PSG
பிரெஞ்சு கோப்பையில் PSG அணி 3-1 என்ற கோல் கணக்கில் Brest அணியை வீழ்த்தியது.
Parc des Princes மைதானத்தில் நடந்த பிரெஞ்சு கோப்பை போட்டியில் PSG மற்றும் Brest அணிகள் மோதின.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் PSGயின் நட்சத்திர வீரர் கைலியின் எம்பாப்பே அசுர வேகத்தில் கோல் அடித்தார்.
கோல் அடித்த மகிழ்ச்சியில் அவர் ஆர்ப்பரிக்க, ரசிகர்கள் அதனை கொண்டாடினர். அடுத்த மூன்று நிமிடங்களிலேயே (37) PSG வீரர் டேனிலோ பெரெய்ரா அபாரமாக கோல் அடித்தார்.
43வது நிமிடத்தில் எம்பாப்பே அடித்த ஷாட் ஒன்று கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இது அவருக்கும் ரசிகர்களுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் Brest அணியின் ஸ்டீவ் மௌரின் தலையால் முட்டி கோல் அடித்தார்.
ஆனாலும், 90+2 நிமிடத்தில் PSG அணிக்கு மூன்றாவது கோல் கிடைத்தது. கோன்கேலோ ராமோஸ் அபாரமாக பந்தை வலைக்குள் தள்ளினார்.
இதன்மூலம் PSG அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் காலிறுதிக்கும் நுழைந்தது.
Le compte rendu de la qualification pour les quarts de finale ! 🗞️#PSGSB29 (3-1) | #CDF
— Paris Saint-Germain (@PSG_inside) February 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |