எங்கள் வீரர்கள் சண்டைக்கு பழகிவிட்டனர், விட்டுக்கொடுக்க மாட்டார்கள்! PSG அணி பயிற்சியாளர்
தங்கள் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
முதலிடத்தில் PSG
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி கடந்த 15ஆம் திகதி, பாயர்ன் மூனிச் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது.
அதன் பின்னர் லில்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் மிரட்டலாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 57 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
@PSG_inside
இந்த நிலையில் நாளை நடக்கும் போட்டியில் மார்செல்லே அணியை PSG எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக PSG கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
PSG தலைமை பயிற்சியாளர்
தங்கள் வீரர்கள் வீரர்கள் சண்டைக்கு பழகிவிட்டதாக PSG தலைமை பயிற்சியாளர் கிறிஸ்டோபே கல்டியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'இது போட்டியாளர்களின் குழு. அவர்கள் சண்டையிடுவதற்கு பழகிவிட்டனர், விட்டுக் கொடுக்க மாட்டார்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
@PSG_inside
@PSG_inside
@PSG_inside