அணியில் இல்லை... ஆனால் பயிற்சியில் களமிறங்கிய எம்பாப்பே
லீக் 1 சாம்பியன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், PSG அணி பயிற்சியின் போது நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே களமிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்பாப்பே வெளியேறுவதாக
சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் லீக் 1 சாம்பியன்ஸ் அணியில் எம்பாப்பே, நெய்மர் மற்றும் மார்கோ வெரட்டி ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
PSG அணியில் இருந்து எம்பாப்பே வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்து அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் உறவு சுமூகமாக இல்லை என்றே கூறப்படுகிறது.
@afp
ஆனால் தற்போது PSG அணி நிர்வாகம் விரிவான பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளதாகவும் அதன் பின்னரே எம்பாப்பே பயிற்சிக்கு களமிறங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் PSG அணியில் இருந்து எம்பாப்பே வெளியேறவில்லை என்ற தகவலும் கசிந்துள்ளது. ஆனால் இது உறுதியானதா என்பது தொடர்பில் தகவல் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |