சோகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்! தோல்வியால் வெளியேறிய PSG
பாயர்ன் முனிச் அணிக்கு எதிரான போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி தோல்வியுற்றதால், சாம்பியன்ஸ் லீக் தொடரை விட்டு வெளியேறியது.
பாயர்ன் முனிச் தடுப்பு
Allianz Arena-யில் நடந்த போட்டியில் பாரிஸ் செயின்ட் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன், ஜேர்மனியின் பாயர்ன் முனிச்சை எதிர்கொண்டது.
பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. முதல் பாதியில் பாயர்ன் முனிச் அணியினர் மெஸ்ஸியை கட்டம் கட்டி தடுத்தனர். இதனால் அவரது கோல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
@ Boris Streubel/Getty Images
மின்னல் வேகத்தில் Save
எனினும் 38வது நிமிடத்தில் கோல் கீப்பர் வலையை விட்டு விலகியிருந்த சமயம், PSG வீரர் அடித்த ஷாட்டை பாயர்ன் முனிச்சின் மாட்டிஜ்ஸ் மின்னல் வேகத்தில் வந்து தடுத்தார். இதனால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.
அதன் பின்னர் ஆரம்பித்த இரண்டாம் பாதியில், பாயர்ன் முனிச் அணி வீரர்கள் ஆக்ரோஷம் காட்டினர். ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் பாயர்ன் முனிச் வீரர் எரிக் மேக்சிம் அபாரமாக கோல் அடித்தார்.
@ Alexander Hassenstein/Getty Images
பாயர்ன் முனிச் வெற்றி
அதனைத் தொடர்ந்து PSGயின் சில முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், 89வது நிமிடத்தில் பாயர்ன் முனிச்சின் நேர்பி மிரட்டலாக கோல் அடித்தார். இதன்மூலம் பாயர்ன் முனிச் 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆண்டில் பாயர்ன் முனிச்சிடம் PSG அடைந்த இரண்டாவது தோல்வி இதுவாகும். PSG வெளியேற்றம் தோல்வி காரணமாக சாம்பியன்ஸ் லீக் தொடரை விட்டு பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் வெளியேறியது.
🎉 𝐐𝐔𝐀𝐑𝐓𝐄𝐑𝐅𝐈𝐍𝐀𝐋𝐈𝐒𝐓𝐒 🎉
— FC Bayern Munich (@FCBayernEN) March 8, 2023
♦️ #FCBPSG 2-0 (agg: 3-0) ♦️ pic.twitter.com/GTBzHMwX3v
இதனால் மெஸ்ஸி மற்றும் PSG ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். பாயர்ன் முனிச் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
It's a Bayern thing ❤️🔥#MiaSanMia #FCBPSG pic.twitter.com/SyPQYB5ln8
— FC Bayern Munich (@FCBayernEN) March 8, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.