மீண்டும் படுதோல்வியடைந்த மெஸ்சியின் PSG! ரொனால்டோ வீசிய மந்திரம் தான் காரணம் எனக் கூறும் ரசிகர்கள்
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி மீண்டும் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மெஸ்சி, எம்பாப்பே ஓய்வு
Stade Louis II மைதானத்தில் நடந்த போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் மொனாகோ அணிகள் மோதின. நடச்சத்திர வீரர்களான லயோனல் மெஸ்சி, கைலியன் எம்பாப்பே ஆகியோர் களமிறங்கவில்லை.
இதனால் நெய்மர் அணிக்கு தலைமை தாங்கினார். ஆனால் அவர் தாக்குதலான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறவிட்டார். மறுமுனையில் மொனாகோ வீரர்கள் துடிப்புடன் விளையாடினர்.
@Daniel Cole/AP, Dpa
ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே அந்த அணியின் கோலோவின் அபாரமாக கோல் அடித்தார்.
PSG இரண்டாவது தோல்வி
அதன் பின்னர் 18 மற்றும் 45+2வது நிமிடங்களில் விசாம் பென் கோல்கள் அடித்தார். PSG அணிக்கு ஆறுதல் கோலை வாரன் ஸைரே 39வது நிமிடத்தில் அடித்தார்.
இறுதியில் மொனாகோ அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியை வீழ்த்தியது.
AFP via Getty Images
ரசிகர்கள் கிண்டல்
ஏற்கனவே மார்செல்லே அணியிடம் தோல்வியடைந்திருந்த PSG தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும். இதனால் ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
ரியாத் சீசன் கோப்பையின்போது ரொனால்டோ, PSG அணியின் மீது ஒரு மந்திரத்தை வீசிவிட்டார் என சில ரசிகர்கள் கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளனர். அதாவது, ரியாத் - பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரொனால்டோ விளையாடினார்.
@Pre Season Friendly - FC Barcelona v Elche
@AP