ரூ.2,700 கோடி... கைலியன் எம்பாப்பேவை விட்டுத்தர பிரபல அணி முன்வைத்த சாதனைத் தொகை
பிரான்சின் PSG அணியில் இருந்து கைலியன் எம்பாப்பே வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், அவரை தங்கள் அணிக்கு விட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி பிரபல அணி நிர்வாகம் சாதனைத் தொகையை அறிவித்துள்ளது.
கால்பந்து உலகில் சாதனை
கைலியன் எம்பாப்பே தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தொகையானது கால்பந்து உலகில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கைலியன் எம்பாப்பேவை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ள சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கால்பந்து அணி நிர்வாகமே முன்வந்துள்ளது.
@dailystar
மொத்தமாக 300 மில்லியன் யூரோ தொகையை செலுத்த தாங்கள் தயார் என அல்-ஹிலால் அணி நிர்வாகம் PSG அணி நிர்வாகத்திடம் முறைப்படி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது 2017ல் நெய்மரை பார்சிலோனா அணியில் இருந்து PSG அணிக்கு விட்டுத்தர 198 மில்லியன் பவுண்டுகள் அளிக்கப்பட்ட அந்த சாதனையை தடாலடியாக முறியடிக்கும் என கூறுகின்றனர்.
ஆண்டுக்கு 604 மில்லியன் பவுண்டுகள்
ஆனால், அல்-ஹிலால் அணி நிர்வாகமும் எம்பாப்பேவும் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதான கைலியன் எம்பாப்பே இந்த கோடையில் PSG அணியில் இருந்து வெளியேறுவதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் PSG அணியிலும் எம்பாப்பே இடம்பெறவில்லை. ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என்றால் PSG அணிக்காக எம்பாப்பே களமிறங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
@dailystar
அல்-ஹிலால் அணியில் எம்பாப்பே இணைந்து கொள்வார் என்றால் ஆண்டுக்கு 604 மில்லியன் பவுண்டுகள் வரையில் வருவாய் ஈட்டுவார் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |