துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய PSG அணியின் நட்சத்திர வீரர்! 24 வயது பெண் பரபரப்பு புகார்
பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணியின் நட்சத்திர வீரர் அச்ராஃப் ஹக்கிமி, பெண்ணொருவரை துரஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்ராஃப் ஹக்கிமி
மொராக்கோ அணியின் நட்சத்திர வீரர் அச்ராஃப் ஹக்கிமி, பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணியில் விளையாடி வருகிறார்.
கடந்த 25ஆம் திகதி பாரிஸ் புறநகரில் உள்ள தனது வீட்டில் வைத்து, ஹக்கிமி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக 24 வயது பெண்ணொருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார், ஆனால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என Parisien செய்தித்தாள் கூறியுள்ளது.
அரசு வழக்கறிஞர் அலுவலகம்
இதுதொடர்பாக Nanterre-யில் உள்ள வழக்கை கையாளும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால், ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்கள், உண்மையைக் கண்டறிய தேவையான விசாரணைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன என ஊடகங்கள் புகார் தெரிவித்துள்ளன.
புகழ்பெற்ற PSG அணி வீரர் மீதான இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் உலகக்கோப்பையில் தனது பெனால்டி மூலம் ஸ்பெயின் அணிக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெற ஹக்கிமி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
@en.psg.fr