எம்பாப்பே அடித்த கோல்! 12வது முறையாக டிராபியை வென்று வரலாறு படைத்த PSG
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 12வது முறையாக பிரெஞ்சு சாம்பியன் டிராபியை வென்று வரலாறு படைத்துள்ளது.
எம்பாப்பேயின் கோல்
பிரெஞ்சு சாம்பியன் டிராபியின் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் டௌலௌசே அணிகள் மோதின.
ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் PSGயின் லீ காங்-இன் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே 44வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.
Belle manière de débuter 2024 non ? ?
— Paris Saint-Germain (@PSG_inside) January 3, 2024
Retour en images sur les célébrations de nos Parisiens. ❤️??#TDC2023 pic.twitter.com/9kgqxoTPOG
அதாவது, இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்கள் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் (Paris Saint-Germain) அணி 2-0 என்ற கோல் கணக்கில் டௌலௌசே (Toulouse) அணியை வீழ்த்தியது.
12வது கோப்பை
இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்சு சாம்பியன் டிராபியை PSG அணி தட்டித் தூக்கியது. இது அந்த அணி கைப்பற்றும் 12வது கோப்பை ஆகும்.
Twitter (@PSG_inside)
கடந்த 1985ஆம் ஆண்டில் முதல் கோப்பையை வென்ற பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன், தற்போது டிராபியை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
Twitter (@PSG_inside)
கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) இந்த சீசனில் 23 போட்டிகளில் விளையாடி 22 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Twitter (@PSG_inside)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |