இறுதிப்போட்டியில் கோல்மழை! வரலாற்றில் முதல் முறையாக UEFA கிண்ணத்தை கைப்பற்றிய PSG
UEFA இறுதிப்போட்டியில் PSG அணி 5-0 என்ற கணக்கில் இன்டர் மிலனை வீழ்த்தி மகுடம் சூடியது.
ஹகிமி முதல் கோல்
ஜேர்மனியின் Allianz Arena மைதானத்தில் நடந்த UEFA இறுதிப்போட்டியில், பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் (PSG) மற்றும் இன்டர் மிலன் (Inter Milan) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே அச்ராஃப் ஹகிமி (Achraf Hakimi) அசத்தலாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து டெசிரே டௌயே 20வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியில் PSG அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியிலும் PSG அணி ஆதிக்கம் செலுத்த, இன்டர் மிலன் வீரர்களால் கோல்களை தடுக்க முடியவில்லை.
முதல் UEFA கிண்ணம்
63வது நிமிடத்தில் டௌயே, 73வது நிமிடத்தில் க்வார்ட்ஸ்கேலியே ஆகியோர் கோல்கள் அடித்தனர்.
மற்றொரு PSG வீரர் சென்னி மயுலு 86வது நிமிடத்தில் கோல் அடிக்க, கடைசிவரை இன்டர் மிலனின் கோல் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
இதனால் PSG அணி 5-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலனை வீழ்த்தி முதல் UEFA கிண்ணத்தை வென்றது.

« On est CHAMPIONS » 🤩🤩🤩🤩 pic.twitter.com/BzX9VlG4B6
— Paris Saint-Germain (@PSG_inside) May 31, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |