காணாமல் போன பிரித்தானிய சிறுமி குறித்து ஜேர்மன் மனோவியல் துப்பறியும் நிபுணர் தெரிவித்துள்ள சோக செய்தி
போர்ச்சுகல் நாட்டில் காணாமல் போன பிரித்தானியச் சிறுமி குறித்த சோகச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜேர்மன் மனோவியல் துப்பறியும் நிபுணர் ஒருவர்.
இளம்பெண் கூறிய விடயங்களால் எழுந்த சர்ச்சை
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் என்னும் மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
மூன்று நாடுகளின் பொலிசார் இத்தனை ஆண்டுகளாக விசாரித்தும் மேட்லின் எங்கிருக்கிறாள், அவள் உயிருடன் இருக்கிறாளா, அவள் கொல்லப்பட்டுவிட்டாள் என்றால் கொலையாளி யார் என எந்த விடயமும் இதுவரை தெரியவரவில்லை.

Image: Michael Schneider
இந்நிலையில், போலந்து நாட்டு இளம்பெண்ணான ஜூலியா (Julia Wendell, 21) என்னும் இளம்பெண், தான்தான் காணாமல்போன மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்னும் பிரித்தானியச் சிறுமி என்று கூறியிருந்தார்.
முதலில் ஜேர்மனி நாட்டவர் என ஊடகங்கள் குறிப்பிட்ட இந்த ஜூலியா, போலந்து நாட்டவர் என தற்போது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்று ஜூலியா கூறியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை உருவானது.
அவரது குடும்பத்தினர் அவர் மீது கோபம் கொள்ள, சமூக ஊடகங்களில் மக்கள் ஜூலியாவைக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர்.
மனோவியல் துப்பறியும் நிபுணர் தெரிவித்துள்ள செய்தி
இந்நிலையில், ஜேர்மன் நாட்டவரான Michael Schneider என்னும் மனோவியல் துப்பறியும் நிபுணர், ஜூலியா மேட்லின் அல்ல என்று தன்னுடைய உள்ளுணர்வு 100 சதவிகிதம் தெளிவாகக் கூறுவதாகவும், ஜூலியா பப்ளிசிட்டிக்காகத்தான் தன்னை மேட்லின் என கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேட்லின் இருக்கும் இடம் போர்ச்சுகல்லில் உள்ள Algarveதான் என தனது உள்ளுணர்வு சொல்வதாகவும் கூறியுள்ளார் Michael. இந்த Algarve என்ற இடத்தில்தான் காணாமல்போனாள் மேட்லின்.

Image: iammadeleinemccan/Instagram
ஆனால், சோகமான விடயம் என்னவென்றால், 2013க்குப் பிறகு மேட்லின் உயிருடன் இருப்பதாக தனது உள்ளுணர்வு கூறவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதாவது, 2013 வாக்கில் மேட்லின் கொல்லப்பட்டிருக்கலாம் என தன் உள்ளுணர்வு கூறுவதாகத் தெரிவித்துள்ளார் Michael.
இந்த Michael, ஜேர்மனி, இத்தாலி முதலான நாடுகளில் காணாமல்போன சிலரை கண்டுபிடிக்க பொலிசாருக்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image: PA