2025ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் ஒரு நல்லது நடக்கும்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் சுவாரஸ்ய தகவல்
2025ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. 2024இல் சந்தித்த எதிர்மறையான விளைவுகளால் வாடியிருக்கும் உலகம், 2025 எப்படி இருக்குமோ என்னும் எதிர்பார்ப்பில் உள்ளது.
பல்வேறு ஜோதிடக்கலைஞர்களும் 2025 குறித்த பல விடயங்களை கணித்துக் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில், 2025இல் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து கணித்துள்ளார் ஆவிகளுடன் பேசும் பெண் ஒருவர்.
ராஜ குடும்பத்தில் ஒரு நல்ல செய்தி
சினெம் சல்மான் (Sinem Salman) என்னும் பெண், தனது கூட்டாளியான போன்ஜுக் (Bonjuk) என்னும் பூனையுடன் இணைந்து எதிர்காலம் குறித்து கணிப்பவர் ஆவார்.
அவ்வகையில், ராஜ குடும்பம் குறித்த ஒரு நல்ல செய்தியைக் கூறியுள்ளார் சல்மான்.
ராஜ குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமுற இருப்பதாக தெரிவிக்கும் சல்மான், அது இளவரசர் ஹரியின் மனைவியான மேகனாக இருக்கலாம் என்கிறார்.
விரைவில் அந்த நல்ல செய்தி வரும் என்று கூறும் மேகன், ஒருவேளை அது கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து, புத்தாண்டில் வெளியாகலாம் என்கிறார்.
அத்துடன், மேகன் கர்ப்பமுற்றதாக வெளியாகும் செய்தியால், ஹரி மேகன் தம்பதியருக்கு ராஜ குடும்பத்துடன் நெருக்கம் ஏற்படும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவிக்கிறார் சல்மான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |