ஸ்டார்மர் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவார்! அமெரிக்காவில் மிகப்பெரிய சம்பவம்..பிரித்தானிய நிபுணர்
பிரதமர் கெயர் ஸ்டார்மர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று பிரித்தானியாவைச் சேர்ந்த ஊடக பிரபலம், நிபுணர் சாலி மோர்கன் தெரிவித்துள்ளார்.
சாலி மோர்கன் கணிப்பு
லண்டனைச் சேர்ந்த ஊடக பிரபலமும், கணிப்பு நிபுணருமான சாலி மோர்கன் (Sally Morgan) 9/11 தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் லொட்டரி வெற்றி எண்களை கணித்ததாக கூறுகிறார்.
அத்துடன் 2026ஆம் ஆண்டிற்கான முக்கிய கணிப்புகளை வெளியிடுகிறார். அதில் ட்ரம்ப் குறித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஒரு உலகளாவிய சர்ச்சையைத் தூண்டுவார்.
அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடக்கப்போகிறது. சிலர் அதனை மோசமானது என்று நினைப்பார்கள்; வேறு சிலர் அது ஆச்சரியமானது என்று நினைப்பார்கள், அது ட்ரம்ப் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்கிறார்.

ஸ்டார்மர் வெளியேற்றப்படுவார்
அவர் ட்ரம்ப் எல்லா நேரங்களிலும் உலகெங்கிலும் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விடயங்களை சொல்கிறார்.
ஆனால், அவர் இப்போது அரசியல்வாதிகளும், தலைவர்களும் 'போதும்' என்று சொல்ல வேண்டிய ஒரு காரியத்தை செய்யப் போகிறார் என்றும் சாலி தெரிவிக்கிறார்.

பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டார்மர் (Keir Starmer) குறித்து அவர் கூறுகையில், கீர் ஸ்டார்மர் கோடைக்காலத்திற்குள் பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் டிராவிஸ் கெல்ஸை மணந்த பிறகு பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) கர்ப்பம் தரித்திருப்பதை அறிவிப்பார் என்றும் சில விடயங்களை கணித்திருப்பதாக கூறியுள்ளார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |