ஒர் ஆண்டில் 2 பொதுப்பரீட்சையாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் ஒரு ஆண்டில் இரண்டு பொதுப்பரீட்சைகள் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு
நாட்டிற்கு புதிய கல்வி கொள்கையை கொண்டு வரும் நோக்கில், 2024 பாட புத்தகங்கள் மற்றும் ஆண்டுக்கு இரண்டு பொதுப்பரீட்சைகள் நிகழும் என தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதில் சிறப்பான ஒரு விடயமாக இருப்பது இரண்டு பரீட்சைகள் நடைப்பெற்றாலும், எதில் அதிக்கூடிய மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதுவே இறுதி மதிப்பொண்களாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும் 11 மற்றும் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இரண்டு மொழி பாடங்களை படிக்க வேண்டுமென்றும், அதில் ஒரு மொழி கட்டாயமாக இந்திய மொழி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |