PPF திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு.., எவ்வளவு தொகை கிடைக்கும்?
பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
குழந்தையின் உயர்கல்வி மற்றும் எதிர்கால செலவுகளை கருத்தில் கொண்டு பல பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே சேமிக்கத் தொடங்குகின்றனர்.
பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு, மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு நல்ல தேர்வாகும்.
இதில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.60,000 சேமிக்கப்படும். இது PPFன் ஆண்டு முதலீட்டு உச்சவரம்பான ரூ.1.5 லட்சத்திற்குள் வருகிறது.
தற்போது PPFக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.
நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு செய்வதால் கூட்டு வட்டி மூலம் நல்ல சேமிப்பை உருவாக்க முடியும்.
குழந்தை 1 அல்லது 2 வயதில் இருக்கும்போதே முதலீட்டைத் தொடங்கினால், காலத்தின் பலனால் அதிக நிதி சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தாமதமாக தொடங்கினால் அதே இலக்கை அடைய அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
PPF மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுவதால் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்தில் வருமான வரிச் சட்டம் 80Cன் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.
குறிப்பாக, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |