நீங்கள் எப்படி பிரித்தானியாவுக்கு வந்தீர்கள்? ரிஷியின் புதிய புலம்பெயர்தல் கொள்கைக்கு மக்கள் ரியாக்ஷன்
நாட்டில் ஆயிரெத்தெட்டு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதைக் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள், நீங்கள் எப்படி பிரித்தானியாவுக்கு வந்தீர்கள் என்றே கேட்டுவிட்டார்கள்!
உலக நாடுகளின் தலைவர்களாக புலம்பெயர்ந்தோர்
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட பலர், பல்வேறு நாடுகளின் தலைமைப் பொறுப்புகளையே ஏற்றுள்ளார்கள். பிரித்தானிய பிரதமர் ரிஷி உட்பட, இதுவரை 32 இந்திய வம்சாவளியினர், பல்வேறு நாடுகளின் தலைவர்களாக இருந்துள்ளார்கள், இருந்துவருகிறார்கள்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸும் இந்திய வம்சாவளியினர்தான்.
ஆனால், பிரித்தானியாவைப் பொருத்தவரையில் மட்டும், பதவிக்கு வந்ததும் இந்த புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் செய்யும் முதல் வேலையே, ஏற்றிவிட்ட ஏணியையே உதைத்துத் தள்ளியதுபோல என்னும் பழமொழி சொல்வதுபோல, புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதுதான்.
தானும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதுபோலத்தான் நடந்துகொள்கிறார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
இதுவரை ரிஷியும் அவரது உள்துறைச் செயலர்களும், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவந்த நிலையில், ரிஷி ஒரு படி மேலே போய், எங்கள் நாட்டுக்கு சட்ட விரோதமாக அல்ல, சட்டப்படி கூட புலம்பெயர்வோர் இவ்வளவுபேர்தான் வரவேண்டும் என்று பேசத்துவங்கியுள்ளார்.
அதற்காக, கடுமையான சில கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசு கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் எப்படி பிரித்தானியாவுக்கு வந்தீர்கள்?
ஆக, புலம்பெயர்தல் பின்னணிகொண்டவராக இருந்துகொண்டே, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கும் ரிஷியைப் பார்த்து கடுப்பாகிப்போன மக்கள், சமூக ஊடகம் ஒன்றில், நீங்கள் எப்படி பிரித்தானியாவுக்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
So how you came to Uk
— Shoaib Nikzad (@shoaibnkzd) December 8, 2023
எதற்கெடுத்தாலும் சட்டவிரோத புலம்பெயர்தல் என்கிறீர்கள், யார் அந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர், அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்கள் சட்டவிரோதமானவர்கள் என்றால், அவர்கள் ஏன் இன்னமும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என சரமாரியாக கேள்விக்கணைகள் தொடுக்கிறார் ஒருவர்.
நாட்டில் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது, அரசு மருத்துவ அமைப்பில் பிரச்சினை, ரஷ்ய அரசியல் தலையீடு, இப்படி எதைக் குறித்து கேட்டாலும், ரிஷியின் ஒரே பதில், ’சிறுபடகுகளை நிறுத்துவோம்’ என்னும் சம்பந்தமில்லாத பதிலாக இருக்கிறது, என கிளித்து தொங்கவிடுகிறார் மற்றொருவர்.
Latest @guardian cartoon#RishiSunak https://t.co/xv5qwR2chl pic.twitter.com/wohh6jyr46
— Ben Jennings (@BJennings90) December 7, 2023
ஆனால், அதெல்லாம் ரிஷியின் காதில் விழாது, அவர் புலம்பெயர்ந்தோரை, குறிப்பாக தனது பெற்றோர் எந்த இந்தியாவிலிருந்து வந்தார்களோ, அதே இந்தியாவிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தியே தீருவது என கங்கணங்கட்டிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கிறார்.
பாவம், புலம்பெயர்தலுக்கெதிராகவே பேசிக்கொண்டிருந்த, முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீத்தி பட்டேலுக்கும், சுவெல்லாவுக்குமே என்ன நிலைமை ஏற்பட்டது என்பதை கவனிக்கும் அளவுக்கு அவருக்கு நேரமில்லை, அடுத்த தேர்தல் நெருங்கி வருகிறதே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |