வாக்கு கேட்டு வந்தால் அதிரடி தாக்குதல் நடத்தப்படும் - அரசியல்வாதிகளை எச்சரிக்கும் இலங்கை மக்கள்
தேர்தலில் வாக்களிக்க கோரி வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என கிராமவாசிகள் எச்சரித்துள்ளனர்.
வாக்கு கேட்டு வந்தால் அதிரடி தாக்குதல் நடத்தப்படும்
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஜனாதிபதி தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவிருப்பதால், வேட்பார்கள் தங்களது பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதி மக்கள் தமது எச்சரிக்கையை விளம்பரங்களாக காட்சிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிராமத்துக்கு செல்லும் வீதிகள், விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினைகள், போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால், இம்முறை தேர்தலை தங்கள் கிராம மக்கள் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் கிராமத்திற்கு வருகை தந்த அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் ஒன்றும் இன்றுவரையில் நிறைவேறவில்லை எனவும் இதனால் வேட்பார்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் தாங்கள் பதில் சொல்லத் தயார் என்றும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |