கடவுள் என சொல்லிக் கொண்ட பிரதமருக்கு மரண அடி! புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் கருத்து
தன்னை கடவுள் என்று காட்டிக் கொண்டவருக்கு தேர்தல் முடிவுகள் மரண அடி என்று புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கமும், பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னணி வேட்பாளர்களாக களத்தில் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் முன்னிலை நிலவரங்களின் படி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 1,55,554 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் 1,23,055 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அவர்களை விட 32,870 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
மோடிக்கு மரண அடி
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அதைப்போல இந்திய அளவிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான முன்னேற்றத்தை கண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், பாஜகவை தோற்கடிக்க முடியாது என்ற மாயையும், தன்னை கடவுள் என்று காட்டிக் கொண்ட பிரதமருக்கும் இது மரண அடி எனத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |