ரேஷன் அரிசிக்குப் பதில் வங்கி கணக்கில் பணம் வரவு- அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாத இலவச அரிசிக்கான பணம் ரூ.35.71 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 20 கிலோவும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 10 கிலோவும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் மொத்தம் 2.54 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆனால், கடந்த 6 மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படவில்லை.
இதையடுத்து, நிலுவையில் உள்ள 6 மாத அரிசிக்கான பணம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 2 மாதங்களுக்கான அரிசிப் பணம் தற்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 மாதங்களுக்கு ரூ.1,720, மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.860 வழங்கப்படுகிறது.
மொத்தம் 2,54,779 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.35 கோடியே 71 லட்சத்து 37 ஆயிரத்து 790 வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 4 மாதங்களுக்கான அரிசிப் பணம் தீபாவளியை முன்னிட்டு, இந்த மாத இறுதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |