பழைய சோற்றுக்கு பெயர் போன ஒரு கடை!
பழைய சோறு என்றாலே தனிசுவை தான்.
அதிலும் அதை சுவைப்பவர்கள் அதன் மீது மின பிரியமுடையவராக தான் இருப்பார்கள்.
கோடைக்காலத்தில் குளுகுளுவென பழைய சோறு சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும்.
முதல் நாளில் சமைத்து மிச்சமாகும் சாதத்தை இரவில் தண்ணீர் ஊற்றி மற்றும் மறுநாள் காலை மோர் ஊற்றி சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் அமிர்தம் தான்.
தற்போது எல்லாம் பல வகையான உணவுகள் வந்துவிட்டதால் இந்த பழைய சோற்றை அனைவரும் மறந்த விட்டார்கள் என்று கூறிகின்றார்கள்.
புதுச்சேரியில் பழைய சோறுக்கடை
ஆனால் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து விட்டதால், புதுச்சேரியில் பழைய சேற்றுக்கு அனைவரும் மாறிவிட்டார்கள்.
இந்த உணவகத்தில் பெருமளவு உணவுகளை பானையில் வைத்து தான் பரிமாறுகின்றார்கள்.
பிரியாணி, ஃபாஸ்ட் புட் போன்ற பல்வேறு துரித உணவு வகைகளை மக்கள் நாடிச் சென்றாலும் தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பழைய சோறு விற்கப்படுவதாக கூறுகின்றார்கள்.
ஆகவே இங்கு வியாபாரமும் சிறந்து விளங்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.