சடலமாக மீட்கப்பட்ட 6 மாத குழந்தை! நாடகமாடிய தாய் கைது..தெரியவந்த அதிர்ச்சி காரணம்
தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் பெண்ணொருவர், தனது 6 மாத குழந்தையை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
காணாமல்போன குழந்தை
புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவருக்கும் லாவண்யா என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
சமீபத்தில் லாவண்யா கணவருடன் கோபித்துக் கொண்டு, புலியூரில் உள்ள தந்தை வீட்டிற்கு 6 மாத குழந்தை ஆதிரனுடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில், லாவண்யா மர்ம நபர்கள் தனது தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, குழந்தை ஆதிரனையும் தூக்கிச்சென்றுவிட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
விசாரணையில் அம்பலம்
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒருமணிநேரம் தேடியதில், தண்ணீர் பேரல் ஒன்றில் சடலமாக குழந்தையை மீட்டனர்.
இதனையடுத்து இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் தாய் லாவண்யா குழந்தையை கொன்றது தெரிய வந்தது.
கணவருடன் வாழ பிடிக்காததால் குழந்தையை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்றதாக நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |