முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அடைத்து வைக்கப்பட்ட தவெக வேட்பாளர்
pudukkottai tvk candidate km sherif locked in room to deny meet cm: புதுக்கோட்டை வந்த முதல்வர் விஜய்யை சந்திக்க தவெக வேட்பாளரருக்கு அனுமதி மறுத்து அவரை அறையில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறையில் அடைத்து வைக்கப்பட்ட தவெக வேட்பாளர்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில், திமுக வேட்பாளர் முத்துராஜாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தவர் தவெக வேட்பாளர் கே.எம் சரீப்.

இன்று பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டைக்கு வருகை தந்த நிலையில், முதல்வரை சந்தித்து தொகுதி மக்கள் தொடர்பான கோரிக்கை மனுவை வழங்க கே.எம்.சரீப் காலை 9:45 மணிக்கே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு நிகழ்வில் கலந்து கொள்ள விஐபி பாஸ் வழங்கப்பட்டிருந்தும், அவருக்கு அரசு அதிகாரிகள் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கவில்லை.
கே.எம்.சரீப் உடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், தமஜக. மாவட்டச் செயலாளர் யூசுப் ராஜா, காங்கிரஸ் நிர்வாகி இப்ராஹிம் பாபு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை. அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

முதல்வர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து சென்ற பிறகே அறைக்கதவை திறந்து விட்டுள்ளனர்.
குடிநீர் மற்றும் கழிவறை கூட இல்லாத அறையில் என்னை அடைத்து வைத்தாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.