கண்ணுக்கு கீழ் வீக்கமா? பட்டுனு சரியாக இதோ சில எளிய வழிகள்
Eye Problems
By Kishanthini
பொதுவாக நம்மில் பலருக்கு கண்ணுக்குக் கீழ் வீக்கம் ஏற்படுவது வழக்கம்.
இது சிலருக்கு முதுமையை அடையும் போது தோல் சுருங்கி, கொழுப்புகள் எல்லாம் பைகள் போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும்.
அதுமட்டுமின்றி உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும். சில நேரங்களில் வீக்கமான கண்கள், சிறுநீரகக் கோளாறு களுக்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.
இவற்றை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வெள்ளரிக்காய் சாறு அல்லது ரோஸ் வாட்டரில் சுத்தமான காட்டன் பஞ்சை நனைக்க வேண்டும்.
சாய்வாக படுத்துக் கொண்டு கண்ணின் மேற் பகுதியில் வைத்து ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு அப்படியே கால் மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இது கண்ணுக்கு இதம் கொடுக்கும். வீக்கத்தைக் குறைக்க உதவும். கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
- உருளைக் கிழங்கும் கூட கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். வீக்கத்தைக் குறைக்க உதவும். உருளைக்கிழங்கை மெல்லியதாக வட்ட வடிவில் சீவி அதை கண்ணின் மேல் பகுதியில் வைத்துக் கொண்டு கால் மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். வெள்ளரிக்காயைும் மெல்லிய வட்ட வடிவில் துண்டாக சீவி எடுத்து கொள்ளலாம்.
- ரசநாடி சூரணம் அல்லது கச்சோரதி சூரணம் ஆகியவை சிறந்த நிவாரணம் அளிக்கும்.
இந்த சூரணத்தில் ஒன்றை 3 முதல் 5 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு அதை மோரில் கலந்து பேஸ்ட் போல ஆக்கிக் கொண்டு அதை வீங்கிய கண்ணில் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவிக் கொள்ளலாம்.
- கருத குளிகாவை எடுத்து அதை நசுக்கி மோர் கலந்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை கண்ணில் தடவி 30 நிமிடம் காய வைக்க வேண்டும்.
- திரிபலா கஷாயத்தை பயன்படுத்தியும் கண்களைக் கழுவலாம். இது கண்களுக்கு குளிர்ச்சியையும் ஆற்றலையும் கொடுக்கும்.
-
கற்றாழை சாறு அல்லது முருங்கை இலைகளை கண்களுக்கு மேல் வைத்து அதன் மேல் மெல்லிய வெள்ளைத்துணியை வைத்து கண்களை கட்டி சிகிச்சை அளிக்கலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US