ஒரே பெண்ணை இருமுறை திருமணம் செய்த குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் புகைப்படம்
சமூக வலைதளத்தில் வைரலாகும் சுயமரியாதை திருமணம் செய்த புகழ் - பென்சியா புகைப்படங்கள்
பெரியார் படிப்பக்கத்தில் ஒரு வருடத்திற்கு முன்பே புகழ் - பென்சியா ஜோடிக்கு திருமணம் நடந்ததாக தகவல்
குக் வித் கோமாளி புகழ் ஒரு வருடத்திற்கு முன்பே சுயமரியாதை திருமணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ்பெற்றவர் புகழ். இவர் தனது நீண்ட நாள் தோழி பென்சியாவை திருமணம் செய்துள்ளார்.
இவர்களது திருமணம் இந்து முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிலையில், புகழ் ஒரு வருடத்திற்கு முன்பே பென்சியாவை சுயமரியாதை திருமணம் செய்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகியுள்ளது. பெரியார் படிப்பக்கத்தில் புகழ் - பென்சியா திருமணம் நடந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த தம்பதி பெற்றோர், உறவினர்களின் திருப்திக்காக தற்போது திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.