வீட்டின் பூஜை அறையில் இதை செய்தால் குடும்பத்தில் துன்பம் ஏற்படுமாம்
இறைவழிபாடு என்பது இந்துக்களின் பிரிக்க முடியாத வழக்கம் ஆகும்.
அன்றாடம் வீட்டில் இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.
அந்தவகையில், வீட்டில் உள்ள பூஜை அறையில் செய்ய வேண்டியது,செய்ய கூடாதவை பற்றி பார்க்கலாம்.
வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்த பின்னர் சுவாமிக்கு ஏற்றிய கற்பூர தீபம் தானாக அனைந்து விடும் அதை நாமாக அனைக்க கூடாது.
பூஜை அறையில் சாமி படங்களுடன் மறைந்த நம் மூதாதையர் படத்தை வைக்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன்கள் நமக்கு கிடைக்கும்.
வீட்டில் பின் வாசல் கதவு இருந்தால் அதை மூடிவிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தும் வெற்றிலை, பாக்கு பழங்களை நேரடியாக தரையில் வைக்க கூடாது. தட்டு அல்லது இலையில் தான் வைக்க வேண்டும்.
வெண்ணையில் லட்சுமி தேவி வாசம் செய்வதால் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டில் வெண்ணையை உருக்க கூடாது.
அதேபோல் தானம் கொடுக்கும் போது அந்த தானத்துடன் சேர்த்து துளசியும் கொடுத்தால் நல்ல பலனை தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |