174 ஓட்டங்கள்! மீண்டும் விஸ்வரூபமெடுத்த புஜாரா
இந்த தொடரில் இந்திய வீரர் புஜாரா தொடர்ச்சியாக இரண்டு சதம் விளாசியுள்ளார்
முந்தைய போட்டியில் புஜாரா வார்விக்ஷிரே அணிக்கு எதிராக 79 பந்துகளில் 107 ஓட்டங்கள் எடுத்தார்
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் செடேஸ்வர் புஜாரா 174 ஓட்டங்கள் விளாசினார்.
ராயல் லண்டன் தொடரின் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் சஸ்செக்ஸ் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், புஜாரா மற்றும் டாம் கிளார்க் இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக புஜாரா சிக்ஸர், பவுண்டரிகளை பறக்க விட்டார். விஸ்வரூபமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிரடியாக சதமடித்தார்.
Back to back centuries for @cheteshwar1. ? ? pic.twitter.com/9F7bMlvvkF
— Sussex Cricket (@SussexCCC) August 14, 2022
இதற்கிடையில் டாம் கிளார்க் 104 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து மிரட்டிய புஜாரா 131 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 174 விளாசினார்.
புஜாரா, கிளார்க்கின் அபாரமான ஆட்டத்தினால் சஸ்செக்ஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 378 ஓட்டங்கள் குவித்தது.
— Sussex Cricket (@SussexCCC) August 14, 2022