நடுவரை கதிகலங்க வைத்த புஜாரா! லெக் திசையில் பறந்த பவுண்டரி: மிரண்டு போய் கீழே விழுந்த வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், சட்டீஸ்வர் புஜாரா அடித்த பந்தில் நடுவரே நிலைகுலைந்து போன வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லீட்ஸில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மதில் மேல் பூனையாக இந்தியா உள்ளது. முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறது.
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. புஜாரா(91) மற்றும் கோஹ்லி(45) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இதற்கு முன் முதல் இன்னிங்ஸில் ஆடியிருந்த இங்கிலாந்து அணி 432 ஓட்டங்கள் குவித்ததால், இந்திய அணி இன்னும் 139 ஓட்டங்கள் பின் தங்கியே நிலையில் உள்ளது. இருப்பினும் இந்தியாவின் ஆட்டம் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.
— Sportzhustle_Squad (@sportzhustle) August 27, 2021
குறிப்பாக சமிப நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த புஜாரா, இந்த இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறார்.
அதில், சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி வீசிய ஓவரில் புஜாரா லெக் திசையில் விரட்டி அடித்தார். அப்போது லெக் திசையில் நின்று கொண்டிருந்த நடுவர் நூலிழையில் தப்பினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.