நெருங்கும் 2023 ஐ.பி.எல் போட்டிகள்: மினி ஏலத்தை புறக்கணித்த இந்திய வீரர்கள்!
2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களின் மினி ஏலத்தை செதேஷ்வர் புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் புறக்கணித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஐபிஎல் மினி ஏலம்
2023ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளுக்கு அணிகள் தங்களை தயார் படுத்தி கொள்ள தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஐ.பி.எல் அணிகள் தங்கள் வீரர்கள் சிலரை அணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர், அத்துடன் மினி ஏலத்தில் புதிய வீரர்களை அணிகளில் சேர்த்து கொள்ளவும் திட்டங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
IPL trophy- ஐ.பி.எல் கோப்பை
ஐ.பி.எல் வீரர்களுக்கான 2023 ஆண்டு மினி ஏலம் டிசம்பர் 23ம் திகதி கேரள மாநிலம் கொச்சியில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களமிறங்காத வீரர்கள்
கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான செதேஷ்வர் புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் விற்கப்படாமல் போகினார்கள்.
செதேஷ்வர் புஜாரா கடந்த 2021 ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் வாங்கப்பட்டார் இருப்பினும், அவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
Cheteshwar-pujara-செதேஷ்வர் புஜாரா(twitter)
இதைப்போன்றே KKR,RCB,PBKS அகிய அணிகளிலும் புஜாரா களமிறக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். செதேஷ்வர் புஜாரா கடைசியாக 2014ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல ஹைதராபாத் அணிக்காக கடைசியாக ஹனுமா விஹாரி 2019ல் களமிறங்கினார்.
Hanuma-vihari-ஹனுமா விஹாரி
புறக்கணித்த இந்திய வீரர்கள்
கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்திலேயே செதேஷ்வர் புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி புறக்கணிக்கப்பட்டதால், மிக குறைந்த பட்ஜெட்டை அணிகள் கொண்டு இருக்கும் இந்த மினி ஏலத்தில் இருந்து இருவரும் வெளியேற விவேகத்துடன் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் டிசம்பர் 23ம் திகதி நடைபெறும் மினி ஏலத்தில் செதேஷ்வர் புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரின் பெயரும் இடம் பெறாது என்று தெரியவந்துள்ளது.