மிரட்டல் இரட்டை சதம்.. பழைய பார்முக்கு திரும்பிய புஜாரா!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் புஜாரா கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டை சதம் விளாசி மிரட்டியுள்ளார்.
கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சசெக்ஸ் சால்வேஜ் அணிக்காக இந்திய வீரர் புஜாரா விளையாடி வருகிறார். டெர்பி மைதானத்தில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் சசெக்ஸ் சால்வேஜ் மற்றும் டெர்பிஷைர் சீனியர் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெர்பிஷைர் சீனியர் அணி முதல் இன்னிங்சில் 505 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஷான் மசூதி 239 ஓட்டங்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய சசெக்ஸ் சால்வேஜ் அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது. புஜாரா 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
A first Sussex ? for @cheteshwar1. ? pic.twitter.com/wrKbNYrXvf
— Sussex Cricket (@SussexCCC) April 17, 2022
ஆனால் இரண்டாவது இன்னிங்சில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். அதன் பின்னரும் நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு இரட்டை சதம் அடித்தார். 387 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 23 பவுண்டரிகளுடன் 201 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்த புஜாரா, தற்போது இரட்டை சதம் விளாசியிருப்பதன் மூலம் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.
2⃣0⃣1⃣* on debut. ?@cheteshwar1 ? pic.twitter.com/T5enZv40vR
— Sussex Cricket (@SussexCCC) April 17, 2022