வெளிநாட்டு அணிக்கு கேப்டனாக களமிறங்கி இரட்டை சதம் விளாசிய புஜாரா! மிரட்டலான ஆட்டம்
இங்கிலாந்தின் கிளப் அணிக்கு தலைமை ஏற்றுள்ள இந்திய வீரர் புஜாரா இரட்டை சதம் அடித்து மிரட்டினார்.
இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சஸ்செக்ஸ் மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இதில் சஸ்செக்ஸ் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் செடேஸ்வர் புஜாரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சஸ்செக்ஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி 523 ஓட்டங்கள் குவித்தது.
கேப்டன் புஜாரா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 231 ஓட்டங்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகள் அடங்கும். மற்றோரு துடுப்பாட்ட வீரர் அல்சோப் 135 ஓட்டங்கள் எடுத்தார்.
PC: Twitter(@SussexCCC)
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மிடில்செக்ஸ் அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 103 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் ராகுல் டிராவிட்டிற்கு அடுத்தபடியாக புஜாரா நிலைத்து நின்று ஆடக்கூடிய டெஸ்ட் வீரராக உருவெடுத்தார். ஆனால் சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் அவர் பெரிதளவில் சோபிக்கவில்லை. எனினும் வெளிநாட்டு அணிக்கு தலைமை தங்கியதுடன், இரட்டை சதமும் விளாசி மிரள வைத்துள்ளார்.
PC: Twitter