அனல் பறக்கும் ஆட்டத்தையும் ஆடுவேன்! ஒரே ஓவரில் 22 ஓட்டங்கள், 79 பந்துகளில் சதம்..அடித்துநொறுக்கிய புஜாரா
- புஜாரா அதிரடி ஆட்டத்தினால் சஸ்செக்ஸ் அணி வெற்றிக்கு மிக அருகில் சென்றது
- இந்தப் போட்டியில் க்ருனால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் புஜாரா ஒரே ஓவரில் 22 ஓட்டங்கள் விளாசினார்.
ராயல் லண்டன் ஒருநாள் தொடரின் நேற்றைய போட்டியில் வார்விக்ஷிர் மற்றும் சஸ்செக்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சஸ்செக்ஸ் அணிக்காக களமிறங்கிய செடேஷ்வர் புஜாரா அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
ஒரே ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசிய புஜாரா, 22 ஓட்டங்களை எடுத்தார். மேலும் அதிரடி சதம் அடித்தார். ஆட்டத்தின் 49வது ஓவரில் ஆட்டமிழந்த அவர், 79 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் குவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் மிதவேக ஆட்டத்தையே வெளிப்படுத்தும் புஜாரா, நேற்றைய ஒருநாள் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தினை பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
Just Cheteshwar Pujara smashing 22 runs in an over!
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 13, 2022
(via @SussexCCC) pic.twitter.com/fdF2QT2Gmd