உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இந்தியாவின் தோல்விக்கு இவரே முக்கிய காரணம்! வெளிப்படையாக சொன்ன பிராட் ஹாக்
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பின் இந்திய பல கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ராஸ் டெய்லருக்கு, புஜாரா விட்ட கேட்ச் மற்றும் கோஹ்லி கேப்டனுக்கு தேவையில்லை, அவருக்கு பதிலாக ரோகித்தை புதிய கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சு எழுந்து வருகிறது.
இந்நிலையில், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், இந்தியாவிற்கும் இந்த போட்டியில் நிறைய வாய்ப்புகள் இருந்தன. புஜாரா மட்டும் ராஸ் டெய்லரின் கேட்சைப் பிடித்து இருந்தால், இந்த போட்டியின் முடிவானது எப்படி வேண்டுமானாலும் மாறி இருக்கும்.
நியூசிலாந்து அணியின் வீரர்களான நிக்கோலஸ் மற்றும் வாட்லிங் என இருவரும் காயமடைந்திருந்தனர். எனவே அனைத்து அழுத்தமும் நியூசிலாந்து அணியின் மீதுதான் இருந்திருக்கும். 55 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் ராஸ் டெய்லர் போன்ற அனுபவ வீரரின் விக்கெட்டை எடுத்திருந்தால், கேன் வில்லியம்சனும் பெரிய ஷாட்கள் ஆட தயங்கி இருப்பார். எனவே இந்த போட்டியின் முடிவானது ட்ராவை நோக்கிக்கூட சென்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.