இருந்தாலும் இப்படி அவுட் ஆகுறது கொடுமை தான்! கடும் கோபத்தில் வெளியேறிய புஜாரா: கமெராவில் சிக்கிய காட்சி
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்றழைக்கப்படும் சட்டீஸ்வர் புஜாரா எதிர்பாரதவிதமாக அவுட்டாகியதால், அவர் மைதானத்தில் கோபத்துடன் பேட்டை தன்னுடைய பேடில் அடித்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் எடுத்து பாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்றழைக்கப்படும் சட்டீஸ்வர் புஜாரா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டிக் கொண்டிருந்த போது, 73 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எதிர்பார்தவிதமாக அவுட் ஆனார்.
சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் வீசிய ஓவரில், லெக் திசையில் அடித்து ஆட, பந்தானது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த பீல்டர் மீது பட்டு, அப்படியே அருகில் இருந்த பீல்டர் ரோரி ஜோசப் பர்ன்ஸ் அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத புஜாரா கடும் விரக்தி மற்றும் கோபத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.