இப்படியும் அவுட் ஆக முடியுமா? பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறியே புஜாராவின் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், புஜாரா ரன் அவுட் வெளியேறும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 482 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
Bad Luck
— Chikmaya Kumar Dash (@ckdash045) February 15, 2021
Bad Luck Pro
Pujara Run-out#INDvENG @cheteshwar1 pic.twitter.com/fcJ0BYjuOI
இந்நிலையில், இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, இந்திய வீரர் புஜாரா இறங்கிய அடித்து ஆட முற்பட, அப்போது லெக் திசையில் பீல்டிங் நின்று கொண்டிருந்த ஓலி போப் அற்புதமாக பீல்டிங் செய்ய, இதைக் கண்டு தடுமாறிய புஜாரா உடனடியாக கிரீஸை நோக்கி ஓடி வர அந்த நேரத்தில், பேட்டானது கீரிசில் பட்டு கீழே விழ, புஜாரா காலை கொண்டு வந்து ரீச் ஆக முயன்றார்.
ஆனால், அதற்குள் கீப்பர் பென் போக்ஸ் அற்புதமாக ரன் அவுட் செய்தார். இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்கள் புஜராவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
புஜாரா ரன் அவுட் வெளியேறும் வீடியோ காட்சி