இந்திய அணியிலிருந்து பும்ரா திடீர் விலகல்! என்ன காரணம்? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு
இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரீத் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட காரணங்களால் நான்காவது டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு ஜஸ்பிரித் பும்ரா கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, வேகப்பந்து வீச்சாளர் விடுவிக்கப்பட்டார், மேலும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் கூடுதலாக யாரும் சேர்க்கப்பட மாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: இந்திய டெஸ்ட அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகிர் சர்மா, மயங்க அகர்வால், சுப்மன் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷாப் பண்ட், விருத்திமான் சஹா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் , முகமது சிராஜ், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.