நாட் அவுட் கொடுத்த அம்பையர்.. இந்திய வீராங்கனை செய்த செயல்! குவியும் பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் அம்பையர் நாட் அவுட் கொடுத்தும் இந்திய வீராங்கனை நேர்மையாக அவுட்டனாதை உணர்ந்து மைதானத்தை விட்டு வெளியேறியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என இழந்தது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு பகலிரவு டெஸ்ட் செப்டம்பர் 30ம் திகதி Carrara மைதானத்தில் தொடங்கியது.
இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் இது 2-வது பகலிரவு டெஸ்ட் போட்டியாகும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ராவத் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று அக்டோபர் 1ம் திகதி இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய பிறகு மந்தனா தனது முதல் டெஸ்ட் சதமடித்து பட்டையை கிளப்பினார்.
எனினும், தொடர்ந்து விளையாடிய மந்தனா 127 ரன்களில் அவுட்டானார்.
முதல் இன்னிங்ஸில் 80வது ஓவரை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சளார் Molineux வீசினார்.
Molineux வீசிய 4வது பந்தை இந்திய வீராங்களை பூனம் ராவத் விளாச முயன்றார், ஆனால் பந்து அவரை கடந்து செல்ல கீப்பர் பிடித்தார்.
பின், அவுட் என ஆஸ்திரேலிய அணி நடுவரிடம் முறையிட்டனர், ஆனால், நடுவர் அவுட் இல்லை என கூறிவிட்டார்.
Punam Raut was not given out, but decided to walk off
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 1, 2021
?? 228/3#AUSvIND #PinkBallTest pic.twitter.com/3HT8htsNVO
ஆஸ்திரேலிய அணி DRS-க்கு செல்ல விரும்பாத நிலையில், பந்து தனது பேட்டில் பட்டு சென்றதை உணர்ந்த இந்திய வீராங்கனை பூனம் ராவத், நேர்மையாக பெவிலியன் திரும்பனார்.
அவுட்டானதை ஒத்துக்கொண்டு நேர்மையாக பெவிலியன் திரும்பிய பூனம் ராவத்தின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.