மகள் விளையாட்டாக செய்த தவறு: தந்தை செய்த பயங்கர விடயம்
மூன்றாம் வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருத்தி விளையாட்டாகச் செய்த தவறுக்காக அவளைக் கொன்று தீவைத்துக் கொளுத்தியுள்ளார் ஒரு தந்தை.
மகள் விளையாட்டாக செய்த தவறு
மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனே நகரைச் சேர்ந்தவர் ஷாந்தாராம் (Shantaram Chavan, 33).
தினக்கூலியாக வேலை செய்யும் ஷாந்தாராமுக்கு இரண்டு பிள்ளைகள். மகன் நான்காம் வகுப்பிலும், மகள் மூன்றாம் வகுப்பிலும் படித்துவந்தார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் பிள்ளைகளுக்கு பள்ளியில் மார்க் ஷீட் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பையன் முதல் ரேங்க் எடுத்திருக்க, அந்தச் சிறுமி இரண்டாவது ரேங்க் எடுத்திருக்கிறாள்.
தங்கை இரண்டாவது ரேங்க் எடுத்ததற்காக அவளை கேலி செய்துள்ளான் அந்தப் பையன். அந்தப் பிள்ளை விளையாட்டாக இரண்டு பேருடைய மார்க் ஷீட்டையும் எடுத்து, தனக்கு முதல் ரேங்க் என்றும் தன் அண்ணனுக்கும் இரண்டாவது ரேங்க் என்றும் திருத்தியிருக்கிறாள்.
இந்த விடயம் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த ஷாந்தாராம் மகளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தை எடுத்து அவளுடைய கழுத்தை ஷாந்தாராம் அறுத்ததாக கூறப்படுகிறது.
பின் நடந்ததை மறைக்க, மகள் உடலை ஒரு துணியில் சுற்றி, வீட்டுக்குள் வைத்து, வீட்டுக்கு தீவைத்துள்ளார் ஷாந்தாராம்.
வீடு தீப்பிடித்துவிட்டதாகவும், மகள் தீயில் இறந்துவிட்டதாகவும் ஷாந்தாராம் நாடகமாட, பொலிசாருக்கு அவர் மகளை கொலை செய்ததைக் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
ஷாந்தாராமையும், அவரது குற்றத்தை மறைக்க உதவிய அவரது மனைவியையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஷாந்தாராமின் மகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |