பாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை: மனைவியை கொலை செய்த கணவன்
இந்தியாவின் புனே நகரில், பாபநாசம் திரைப்பட பாணியில் நன்றாக திட்டமிட்டு தன் மனைவியை கொலை செய்து எரித்த ஒரு நபர் சிக்கினார்.
திரைப்பட பாணியில் ஒரு கொலை
புனேயிலுள்ள Shivane என்னுமிடத்தில் ஆட்டோமொபைல் கராஜ் ஒன்றை நடத்துவருபவர் சாம்மர் யாதவ் (Sammer Punjabrao Jadhav, 42).

யாதவின் மனைவி அஞ்சலி (38). யாதவுக்கு சமீபத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ஆக, தங்கள் உறவுக்கு இடைஞ்சலாக இருக்கும் மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் யாதவ்.
தமிழில் பாபநாசம் என்னும் பெயரில் வெளியான திரைப்படம், ஹிந்தியில் திரிஷ்யம் என்னும் பெயரில் வெளியானது.
அந்தப் படத்தின் நாயகன் சாட்சியங்களை அழிப்பதைப் பார்த்து, தானும் அதேபோல நன்கு திட்டமிட்டு தன் மனைவியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார் யாதவ்.
Shindewadi என்னுமிடத்தில் மாதம் 18,000 ரூபாய்க்கு குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு ஒரு இரும்பு உலை, விறகுகள் எல்லாவற்றையும் சேமித்துவைத்துள்ளார் யாதவ்.
பின்னர், கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 26ஆம் திகதி, ஒரு நீண்ட ட்ரைவ் போகலாம் என மனைவியை அழைத்துச் சென்ற யாதவ், இரவு வீடு திரும்பும் நேரத்தில், அஞ்சலியை Shindewadi என்னுமிடத்திலுள்ள அந்த குடோனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அஞ்சலியைக் கழுத்தை நெறித்துக்கொன்றுள்ளார் யாதவ்.
பிறகு அவரது உடலை அந்த இரும்பு உலைக்குள் வைத்து விறகின் உதவியுடன் எரித்து, சாம்பலை அருகிலுள்ள நதியில் வீசிவிட்டு, அந்த இரும்பு உலையையும் சுத்தம் செய்துவைத்துள்ளார் அவர்.
இரண்டு நாட்களுக்குப் பின் பொலிஸ் நிலையம் சென்று தன் மனைவியைக் காணவில்லை என புகாரளித்துள்ளார் யாதவ்.
பொலிசார் அஞ்சலியைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், மனைவி காணாமல் போன விடயம் குறித்து யாதவ் மாற்றி மாற்றி பேச, பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
CCTV கமெரா காட்சிகள் உதவியுடன், முறைப்படி யாதவை விசாரிக்க, தான் தன் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

திரிஷ்யம் திரைப்படம் பார்த்து, ஆதாரங்களை மறைக்க தான் முயன்றதைக் குறித்தும் யாதவ் பொலிசாரிடம் விவரிக்க, பொலிசார் யாதவைக் கைது செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |