8 வயது மகன் மற்றும் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்!
புனைவில் மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தோடு தற்கொலை
புனைவிலுள்ள அயுந்த் எனும் பகுதியில் சுடிப்டோ கங்குலி(44) என்றவர் தனது மனைவி மற்றும் மகனை பாலித்தீன் பைகள் மூலம் அடைத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகன் தனிஷ்கா ஆகிய இருவரோடு சுதிப்தோ கங்குலியும் உயிரழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
@gettyimages
சுதிப்தோ மற்றும் பிரியங்கா ஆகிய இருவருக்கும் போன் போட்டு எடுக்காததால் சந்தேகத்தின் பேரில் சுகிப்தோவின் சகோதரர் ஒரு நண்பரை வீட்டிற்குச் செல்ல சொல்லியிருக்கிறார். வீடு பூட்டியிருப்பதைக் கண்டு, குடும்பத்தினரை காணவில்லை என புனேவின் சதுஷ்ரிங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலித்தீன் பையோடு சடலங்கள்
காவல்துறையினர் இருவரது போன் நெட்வொர்க்கை கண்காணித்து அவர்கள் வீட்டிற்குள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் மாதிரி சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர்.
@cinemorgue
வீட்டில் சுகிப்தோ தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரது முகத்தில் பாலித்தீன் பை சுற்றப்பட்டு இறந்த நிலையில் கிடந்திருப்பதையும் பார்த்திருக்கின்றனர்.
அவர்களது தற்கொலைக்கான காரணத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
@file
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சுதிப்தோ அந்த பணியிலிருந்து விலகி புதிதாக தொழில் தொடங்கியுள்ளார். மேலும் விசாரணையில் உண்மைகள் தெரியவரும் என புனைவின் சதுஷ்ரிங்கி காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.