இன்னொரு திருமணம்... உயிரை மாய்த்துக்கொள்ளும் முன் பெண் எழுதிவைத்த கடிதம்
A 33-year-old woman and her 6-year-old son died after jumping from the 18th floor of a residential building: பெண்ணொருவர், கட்டிடம் ஒன்றின் 18ஆவது மாடியிலிருந்து, தன் மகனுடன் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனே நகரில், பெண்ணொருவர் தனது மகனுடன் 18ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
எழுதிவைத்திருந்த கடிதம்
ஏக்தா (Ekta Bhangad,33) என்னும் பெண், தன் கணவர் மற்றும் தங்கள் 6 வயது மகனுடன் புனே நகரிலுள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று, ஏக்தா தன் மகனை அழைத்துக்கொண்டு 18ஆவது மாடிக்குச் சென்ற நிலையில், இருவரும் அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த முடிவை எடுக்கும் முன், ஏக்தா தன் கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார்.
ஏக்தா நீண்ட காலமாக முதுகெலும்பில் ஒரு பிரச்சினையால் அவதியுற்று வந்துள்ளார்.
ஆகவே, தன் கணவரை மறுமணம் செய்துகொள்ளுமாறு அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ள ஏக்தா, தான் இல்லாவிட்டால் தன் மகன் எப்படி சமாளிப்பான் என்னும் கவலையையும் அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.