லெஜெண்ட்ஸ் லீக்கில் பட்டையை கிளப்பிய 36 வயது இலங்கை வீரர்
ராயல் ரைடர்ஸ் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனீத் மெஹ்ரா, தில்ஷன் முணவீரா
சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் ராயல் ரைடர்ஸ் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லெஜெண்ட்ஸ் லீக் போட்டி ஹால்ட்வானியில் நடந்தது.
Mr. Right Place Right Time 👌
— FanCode (@FanCode) March 17, 2026
Catch all the action from the Legends League Cricket LIVE on FanCode 📲#LegendsLeagueCricket pic.twitter.com/T9zKsJYRx5
முதலில் ஆடிய சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் மஸகட்ஸா 19 ஓட்டங்களும், புனித் பிஷ்ட் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் புனீத் மெஹ்ரா 35 பந்துகளில் 63 ஓட்டங்களும் (2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்), தில்ஷன் முணவீரா 37 பந்துகளில் 53 ஓட்டங்களும் ( ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள்) விளாசினர்.
சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி
இதன்மூலம் சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 179 ஓட்டங்கள் குவித்தது. அனுரீத் சிங் 2 விக்கெட்டுகளும், ரிஷி தவான், சதுரங்க டி சில்வா, ஏஞ்சலோ பெரேரா மற்றும் திசர பெரேரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய ராயல் ரைடர்ஸ் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மொஹம்மது ஷாஷாத் 44 ஓட்டங்களும், திசர பெரேரா 28 ஓட்டங்களும் எடுத்தனர். திவேஷ் பதனியா 3 விக்கெட்டுகளும், ரவி ஜங்கித் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |