மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசை இது தான்! கதறும் குடும்பத்தினர்
நடிகர் புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை குறித்து இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
கன்னடாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார்(46). இவருக்கு சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது தீவிர ரசிகர்கள் கன்னட சூப்பர் ஸ்டார் என்று ஆசையாக அழைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் காலையில் வீட்டில் இருக்கும் போது லேசாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் அவரது கடைசி ஆசை குறித்து நடிகை ரம்யா கூறியுள்ளார்.
அவருக்கு தானே படம் இயக்க வேண்டும் என்பது ஆசை. அதுமட்டும் இல்லாமல் அண்ணன் சிவராஜ் குமாரையும், என்னையும் வைத்து படம் இயக்க விரும்புவதாக புனித் கூறினார்.
அதற்கு முன்பு என்னை வைத்து மியூசிக் வீடியோவை இயக்க விருப்பியதாக தெரிவித்தார்.ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போய் விட்டது.