மறைந்த நடிகர் புனித ராஜ்குமார் பெயரில் விருது! மேடையில் கலங்கி நின்ற மனைவி
மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித ராஜ்குமாருக்கு விருது அளிக்கப்பட்டதை, அவரது மனைவி கலங்கிய நிலையில் பெற்றுக் கொண்ட நிகழ்வு ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும், பிரபல நடிகருமான புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர் மக்களுக்கு செய்த நன்மைகள் இறப்புக்கு பின்னர் அதிகளவில் வெளியே தெரிய வந்தது, அவர் மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் புனித ராஜ்குமார் பெயரில் விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான புனித் ராஜ்குமார் விருது நடிகர் ஆர்யாவுக்கு வழங்கப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொண்ட ஆர்யா பேசும்போது, புனித் ராஜ்குமாருடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து யுவரத்னா என்ற படத்திற்காக மக்களுக்கு பிடித்தமான நடிகர் என்ற விருது புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது.
அதனை அவரது மனைவி அஸ்வினி கலங்கிய மனதுடன் மேடையில் பெற்றுக் கொண்டார். அப்போது அரங்கில் குழுமியிருந்தவர்கள் கனத்த இதயத்துடன் கைதட்டி பாராட்டினர்.