மருத்துவர் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ள 7 பேருக்கு உதவிய செவிலியருக்கு தண்டனை
சுவிட்சர்லாந்தில், மருத்துவர் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ள 7 பேருக்கு உதவிய முன்னாள் செவிலியர் ஒருவருக்கு, நீதிமன்றம் ஒன்று தண்டனை வழங்கியுள்ளது.
செவிலியருக்கு தண்டனை
சுவிட்சர்லாந்தில் செவிலியராக பணியாற்றிய பெண்ணொருவர், அருகிலுள்ள இத்தாலியில் சட்டங்கள் கடுமையாக இருந்ததைப் பயன்படுத்திகொண்டு, அங்கிருந்து சிலரை மருத்துவர் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்துள்ளார்.
அவ்வகையில் ஏழு பேரை அவர் இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்துள்ளார் அவர்.
மாதம் ஒன்றிற்கு 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் இருந்த நிலையிலும், அந்தப் பெண் சுயநலத்துக்காக இத்தாலியிலிருந்து மக்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு 67 வயதாகிறது, அத்துடன், இப்போது அவர் செவிலியர் பணியிலும் இல்லை.
மேலும், அவருக்கு மோசமான மன நல பாதிப்பும் உள்ளது. ஆகவே, அவருக்கு சிறைத்தண்டனை வழங்குவதற்கு பதிலாக, அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது Lugano மாகாண குற்றவியல் நீதிமன்றம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |