வெறும் 4 மணிநேரத்தில் அடித்த அதிர்ஷ்டம்: கோடீஸ்வரரான விவசாயி
பஞ்சாபை சேர்ந்த விவசாய ஒருவர் வெறும் நான்கு மணிநேரத்தில் 2.5 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மகில்பூரை சேர்ந்தவர் ஷீத்தல் சிங். விவசாயியான இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இவரது பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு உள்ள ஒரு லொட்டரி கடையில் லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கி உள்ளார். அதன் பின் வீட்டிற்கு சென்று அன்றாட வேலைகளை பார்த்துள்ளார்.
4 மணி நேரத்திற்கு பிறகு லொட்டரி வாங்கிய கடையின் உரிமையாளர் ஷீத்தலை தொடர்பு கொண்டு நீங்கள் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு ரூ.2.5 கோடி பம்பர் பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் திகைத்துப்போய் நின்ற ஷீத்தல் இனிப்புகள் வழங்கி அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீத்தல், தனது வீட்டில் மகிழ்ச்சி நிலவுவதாகவும், தனக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள் வீட்டில் குவிந்து வருவதாகவும் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், பரிசுத்தொகையை எப்படி செலவு செய்வது என்பது குறித்து தன் குடும்பத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |