பஞ்சாப் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய 1400 கிராமங்கள், 30 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் கிட்டத்தட்ட 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் வெள்ளப்பெருக்கு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் 30 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், 3,54,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
20,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 1400 கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கியுள்ளன.
மேலும் 1,48,000 ஹெக்டேர் விவசாய நிலம் வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்களுக்கு பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
1988ம் ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |